Completed

V/Poompukar Kannaki Vidyalayam

📍 Vavuniya
👥
120
Students helped
💰
LKR 71,999
Value of support
❤️
1
Supporters
📅
22-04-2026
Date
🎁 Bluetooth Speaker

What we did

V/Poompukar Kannaki Vidyalayam is a provincial Tamil-medium school located in Poompukar, Kalmadu, Vavuniya. The school operates under the Vavuniya North Education Zone and Omanthai Educational Division, providing education from Grade 1 to Grade 11. It serves children from Poompukar and the surrounding rural communities while supporting their academic progress, personal development and overall wellbeing.

🏆 Success Story

Support Our Schools Organization donated a Bluetooth speaker valued at LKR 71,999.00 to V/Poompukar Kannaki Vidyalayam, located in Poompukar, Kalmadu, Vavuniya. This essential audio equipment enhances classroom learning, supports school events and assemblies, and empowers teachers to deliver more engaging and interactive lessons for students.

“அனைவருக்கும் வணக்கம். எமது பாடசாலை மாணவர்களின் முன் வைப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் காலை பிரார்த்தனைக்காகவும் மாணவர் மன்ற செயல்பாடுகளுக்காகவும் ஏனைய மாணவர்களுடைய பொது வெளிச்செயற்பாடுகளுக்காகவும் ஒலிபெருக்கப்பட்டியின் தேவை அவசியமாக இருந்தது. பல வருடமாக பல தரப்பினரிடம் இதை பற்றிக் கேட்டிருந்த போதும் அது கிடைக்கவில்லை. ஆனால் ஐயமட்டுண் நிறுவனத்தின் ஊடாக எமக்கு கிடைத்திருந்த Support our school நிறுவனத்தினுடைய இணைப்பாளரும் நிறுவனமாகிய திரு.காண்டி ஐயா அவர்களுடைய நேரடி அன்பளிப்பு மூலம் இந்த ஒலிபெருக்கி பெட்டி எமது பாடசாலைக்கு கிடைத்திருக்கின்றது. இதற்காக எமக்கு உதவி புரிந்த ஐயமிட்டுண் திரு. ரூபன் ஐயா மற்றும் திரு.முரளி ஐயா ஆகியோருக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதன் மூலம் மாணவருடைய ஆளுமையும் முன்வைப்பு திறனும் பயமின்மையும் வளரும் என்பது கண்கூடு. எமது பாடசாலையானது வவுனியா நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் எல்லை புறக்கிராமத்தில் அமைந்துள்ளது. யாருடைய உதவியும் கிடைக்காத நிலையில் இருக்கின்ற எமது பாடசாலைக்கு ஐயமிட்டுண் நிறுவனமும் Support our school நிதியமும் இணைந்து உதவி செய்திருக்கின்றதமை மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் ஆகும். இவ்வாறான உதவிகள் எமது பாடசாலைக்கு கிடைப்பதன் மூலம் அனைத்து நகரப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு வளர்ச்சியடைய கூடிய ஒரு நிலைமையை இது உருவாக்கி தருகிருக்கின்றது. உண்மையிலேயே நீண்ட காலம் செல்லும் அந்த எதிர்பார்த்திருந்த நிலையில் உடனடியாகவே இந்த Portable Speaker எமது பாடசாலைக்கு கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது. இன்னும் ஒரு சில தேவைப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் வேறு பாடசாலைக்கு அவர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கோரிக்கையை இன்னும் நான் முன் வைக்கவில்லை. இருப்பினும் இன்னொரு கடிதம் மூலம் அதனை முன்வைக்கின்றேன். இயலுமான வரை உதவி செய்தால் சிறப்பாக இருக்கும் என எனது கருத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இறுதியாக எமது பாடசாலை மாணவர்களினதும் சமூகத்தினரதும் பாடசாலையினதும் நிலையினைக் கருத்தில் கொண்டு திரு.ரூபன் ஐயா மூலம் திரு.காண்டீபன் ஐயா செய்த இந்த உதவிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.”
— மேஜர் எம்.சாருஹாசன் - அதிபர், வ/பூம்புகார் கண்ணகி வித்தியாலயம், வவுனியா.

📸 Gallery

🎬 Videos